ஏப்ரல் 1 முதல் வருமான வரி தாக்கல் ஆரம்பம்.. Form 16 வந்துவிட்டதா? Form 16 இல்லாமல் தாக்கல் செய்ய முடியுமா?

  2024 – 25ஆம் தேதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய தாக்கல் ஏப்ரல் 1 முதல் தொடங்க இருக்கும் நிலையில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு Form 16 வந்து விட்டதா…

form 16

 

2024 – 25ஆம் தேதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய தாக்கல் ஏப்ரல் 1 முதல் தொடங்க இருக்கும் நிலையில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு Form 16 வந்து விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது குறித்து தற்போது விரிவாக பார்ப்போம்.

Form 16 என்றால் என்ன?

Form 16 என்பது ஒவ்வொரு நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு வழங்கும் ஒரு சான்றிதழ் ஆகும். இதில் ஊழியரின் சம்பள விவரங்களும் நிதியாண்டு முழுவதும் பிடிக்கப்பட்ட TDS பற்றிய விவரங்களும் இடம்பெறும். எளிதாக கூற வேண்டுமெனில் உங்கள் வருமான வரியை உங்கள் நிறுவனமே பிடித்துவிட்டு, அதை வருமான வரித்துறைக்கு செலுத்தியிருக்கிறதற்கான ஆதாரமாக Form 16 செயல்படுகிறது.

Form 16 இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. பகுதி A: இதில் நிறுவனத்தின் மற்றும் ஊழியரின் விவரங்கள் அடங்கும். உதாரணமாக, PAN Number, TAN Number, வேலை காலம், பிடிக்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட வரி ஆகிய தகவல்கள் இருக்கும்

பகுதி B என்பது ஒரு விரிவான சம்பள விவரம் ஆகும். இதில் வருமானம், விதிகளின்கீழ் விலக்கு அளிக்கப்படும் தொகைகள் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த வரி போன்ற தகவல்கள் இடம்பெறும்.

Form 16 எப்போது வழங்கப்பட வேண்டும்?

ITR தாக்கலுக்கான கடைசி தேதிக்கு முன்பாக, ஊழியர்கள் Form 16-ஐ பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். Form 16 மதிப்பீட்டு ஆண்டின் ஜூன் 15-க்குள் நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும்.

ITR தாக்கலுக்கு Form 16 கட்டாயமா?

Form 16 கட்டாயம் இல்லை, ஆனால் ITR தாக்கலை எளிதாக்க இது உதவுகிறது. வருமானம் மற்றும் வரி பிடித்தம் ஆகியவற்றைப் பற்றிய தவறுகளை குறைக்கும். மேலதிக வரி பிடிக்கப்பட்டிருந்தால், Form 16 மூலம் வரி ரீபண்ட் கோருவதும் எளிதாகும்.

Form 16 இல்லாவிட்டால் ITR தாக்கல் செய்வது எப்படி?

Form 16 இல்லாவிட்டாலும், பிற மாற்று ஆவணங்களை பயன்படுத்தி ITR தாக்கலாம். அதற்கு Form 26AS என்ற Form வருமான வரித்துறையின் இணையதளத்தில் கிடைக்கும். இதில் உங்கள் PAN-க்கு ஒதுக்கப்பட்ட TDS பற்றிய தகவல்கள் விளக்கமாக இருக்கும்

மேலும் என்னென்ன ஆவணங்கள் தேவை?

வங்கி ஸ்டெட்மெண்ட்: இது உங்கள் வருமானத்தையும் செலவுகளையும் உறுதிப்படுத்த உதவும்.

Annual Information Statement: இது சம்பளம், இலாபம், வட்டி வருமானம் போன்ற அனைத்து வருமானங்களையும் தெரிவிக்கும்

Salary Slips: இது உங்கள் வருமானம் மற்றும் கழித்தம் செய்யப்பட்ட வரி ஆகியவற்றை உறுதிப்படுத்த பயன்படும்.

முடிவில், Form 16 ITR தாக்கலுக்குத் தேவையான ஒரு முக்கிய ஆவணம் என்றாலும், அது இல்லாவிட்டாலும் மாற்று ஆவணங்களை கொண்டு வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்யலாம்.