மனுஷங்களாடா நீங்க எல்லாம்.. நண்பனின் திருமண நிகழ்வில் க்ரூப்பாக வந்து நண்பர்கள் கொடுத்த பரிசு.. வைரல் வீடியோ..

By Ajith V

Published:

நமக்குத் தெரிந்த நண்பர்கள் அல்லது குடும்பத்தினர்கள் மத்தியில் ஒரு திருமண விழா வருகிறது என்றாலே அது நிச்சயம் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை கொடுக்கும். நீண்ட நாட்களாக நாம் பார்க்காமல் இருக்கும் பலரும் இந்த திருமண நிகழ்வில் ஒன்றாக இணைவதன் மூலம் அந்த தருணமும் மிக அழகாக மாறுகிறது.

அந்த திருமண நாள் எப்போது வரும் என காத்திருந்து உறவினர்களுடன் அது தொடர்பான நேரங்களை கழித்து பல நினைவான தருணங்களையும் அசைபோடும் நேரமாக இந்த திருமண விழா இருந்து வருகிறது. இதனிடையே சமீபத்தில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் மணமகனின் நண்பர்கள் சேர்ந்து கொடுத்த பரிசு தொடர்பான வீடியோ தான் தற்போது பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

ஒரு திருமண விழா என வரும்போது மணமக்களுக்கு ஏதாவது பரிசினை வழங்குவது வழக்கமாக பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழக்கமாகும். விலை மதிப்புள்ள பரிசுகள் தொடங்கி மணமக்களை நெகிழ வைக்கக்கூடிய பரிசு வரையிலும் பலவிதமான வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால் நண்பர்களாக இருப்பவர்கள், அசத்தலான பரிசு கொடுக்க வேண்டுமென நினைக்காமல் வேடிக்கையாக நண்பனின் திருமணத்தில் எதையாவது செய்து விட வேண்டும் என்று தான் நிச்சயம் நினைப்பார்கள்.

ஒருமுறை வெங்காய விலை ஏறிய போது நண்பனின் திருமணத்திற்கு மூட்டையில் வெங்காயத்தையும் நண்பர்கள் வாங்கி கொடுத்திருந்தனர். இதே போல, நிறைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ள சூழலில் தற்போதும் அப்படியான ஒரு பரிசு பொருள் தொடர்பான வீடியோ தான் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் மணமக்கள் மேடையில் இருக்க வரிசையாக வரும் நண்பர்கள் சிலர் பக்கெட், மாக், டிடெர்ஜண்ட் பவுடர், குழந்தையின் ஃபீடிங் பாட்டில், சிறிய கண்ணாடி, ஹார்பிக் கிளீனர், பிரெஷ், விளக்குமாறு என ஒரு வீட்டிற்கு தேவையான பல பொருட்களை வரிசையாக வந்து கொடுத்துக் கொண்டே செல்கின்றனர்.

கணவன், மனைவியாக மாறிவிட்டால் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்பதற்கு சமமாக இந்த வீடியோவில் அவர் கூட அவர்கள் கொடுத்த பரிசு பொருட்கள் இருந்தது. இப்படி வேடிக்கையாக பரிசுகள் கொடுத்ததும் அதனால் அதிருப்தி அடையாமல் சிரித்துக் கொண்டே அந்த ஜோடி ஏற்றுக் கொண்டதும் அதிக கவனம் பெற்று வருகிறது.

இதனை காணும் நெட்டிசன்கள் பலரும் சிரிப்பலையில் ஆழ்ந்து வருவதுடன் மட்டுமில்லாமல் இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பதெல்லாம் பெரிய விஷயம் என வேடிக்கையாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.