கொரோனாத் தொற்று 2.5 ஆண்டுகளாக உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கிவிட்டது. கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் ஆராய்ச்சியிலேயே இருந்து வருகின்றது.
ஆனால் கொரோனாவினைக் கட்டுக்குள் வைக்க கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின்னர் ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியான நோவாவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத் தடுப்பூசியை தயாரித்து விநியோகம் செய்யும் உரிமையை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் பெற்றது. பல கட்ட ஆராய்ச்சிக்குப் பின் நோவாவேக்ஸ் தடுப்பூசி தற்போது 12 முதல் 17 வயதுக்குட்டவர்களுக்கு குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இனி கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் தடுப்பூசிகளுடன் நோவாவேக்ஸ் தடுப்பூசியானது செலுத்தப்பட உள்ளது.