அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களான ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் சீன கட்டுப்பாட்டில் வருவதாக கூறப்படும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம், டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த வர்த்தக வரிகளால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அமெரிக்க வாகனத்துறை பெரும் நெருக்கடியில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதிபர் டிரம்ப் விதித்த வரிகளால், வாகனத்துறையில் மட்டும் 21,000க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். 2008ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த அளவுக்கு வேலை இழப்புகள் ஏற்பட்டது இதுவே முதல் முறை. ஸ்டெல்லண்டிஸ் (Stellantis) நிறுவனம் 900 பணியாளர்களை பணி நீக்கம் செய்ததுடன், கனடா மற்றும் மெக்சிகோவிலும் தற்காலிக பணி நீக்கங்களை அறிவித்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது சிகாகோ தொழில்நுட்ப மையத்தில் பணியாளர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டது. மேலும், அதன் தானியங்கி வாகன பிரிவில் இருந்து சுமார் 1,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.
பொருள் செலவுகள் அதிகரிப்பு: ஸ்டீல், அலுமினியம் மற்றும் மைக்ரோசிப்கள் போன்ற பொருட்களுக்கான வரிகள், உற்பத்தி செலவுகளை அதிகரித்துள்ளன. இதனால் வாகன பாகங்களின் விலை 37% வரை உயர்ந்துள்ளது. இது புதிய கார்களின் விலையை பல்லாயிரக்கணக்கான டாலர் அதிகரிக்க செய்து, அவை சாமானியர்களுக்கு எட்டாததாக ஆக்கிவிட்டது.
நிறுவனங்களின் இழப்புகள்: ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெல்லண்டிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள், இந்த வரிகளால் இழப்புகளை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளன. டொயோட்டா நிறுவனம், வர்த்தக நடவடிக்கைகளால் $9.5 பில்லியன் இழப்பு ஏற்படும் என கணித்துள்ளது. மேலும், நைக் மற்றும் அடிடாஸ் போன்ற நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க இழப்புகளை அறிவித்துள்ளன.
முதலீடுகளில் மந்தநிலை: வர்த்தக வரிகளின் அழுத்தம் காரணமாக, பல நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலைகளில் முதலீடு செய்வதை தாமதப்படுத்துகின்றன அல்லது குறைத்து வருகின்றன. இதனால், உலகளாவிய மின்சார வாகன சந்தையில் அமெரிக்கா பின்தங்கிவிடும் அபாயம் உள்ளதாக காணொலி கூறுகிறது.
பொருளாதாரத்தின் எதிர்காலம்: வர்த்தக வரிகள் உயரும்போது, பிற நாடுகளும் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் விளைவாக, பொருளாதார வளர்ச்சி குறைந்து, பணவீக்கம் அதிகரித்து, வேலை இழப்புகள் ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இத்தகைய ஒரு சூழலில் தான் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை என்றாலும், இதுபோன்ற செய்தியே அமெரிக்காவுக்கு ஒரு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
