அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.. உணவுப் பிரியருக்கு நேர்ந்த சோகம்.. நேரலையில் நடந்த பயங்கரம்

By John A

Published:

சீனா : அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது தங்களின் கட்டுப்பாட்டை விட்டு வெளியேறும் போது எதிர்பாராத விளைவுகள் ஏற்படுகிறது. அது ஆயுளை அதிகப்படுத்தும் அமிர்தமாக இருந்தாலும் கூட அது விஷமாக மாறும் என்பதையே இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

பொதுவாக உணவு என்பது நாம் உயிர்வாழ்வதற்காகவே இருக்கும் பொருள். இந்த உணவே ஒருவருக்கு எமனாக மாறியிருக்கிறது. சீனாவைச் சேர்ந்த பெண்மணியின் பெயர் பான் சியோட்டிங். 24 வயதே ஆன இப்பெண்மணி சமூக வலைதளங்களில் பிரபலமானவர். குறிப்பாக அதிக அளவிலான உணவுகளை நேரலையில் உண்டு காட்டி அதன் மூலம் பிரபலமானவர். தினமும் இவர் சாப்பிடும் உணவின் அளவு சுமார் 10 கிலோ இருக்குமாம்.

இப்படி கண்மூடித்தனமாக உணவினை உண்டு பல உடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவரது பெற்றோர்களும், நண்பர்களும் கண்டித்துள்ளனர். எனினும் சமூக வலைதளத்தின் மோகம் அவரை விடவில்லை. தொடர்ந்து உணவு சாப்பிடுவதை நிறுத்தவில்லை. அப்படி அவர் உண்ட உணவு அவருக்கே எமனாக மாறியிருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை வழக்கில் திருப்பம்.. தாயார் பகீர் புகார்

வழக்கம்போல் ஒருமுறை அதிக அளவினை எடுத்து உண்ணும் சவால்களை செய்ய, அதனை பலர் இணையத்தில் நேரலையில் பார்த்துள்ளனர். அப்படி அவர் உண்ணும் பொழுதே வயிற்றிலும், தொண்டையிலும் பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. சிறிது நேரத்தில் உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழக்க பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி உண்டாகியிருக்கிறது.

தற்போது இணையத்தில் உணவுப் பிரியர்களின் வீடியோக்களே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. புதிது புதிதாக சமையல் செய்கிறேன் என்று ஒவ்வாத உணவுகளைத் தயாரித்து சாப்பிடுகின்றனர். இவற்றைப் பார்க்கும் இணையவாசிகளும் அவர்களைப் போல் முயற்சி செய்து விபரீத்தில் மாட்டிக் கொள்கின்றனர். தற்போது இந்த இளம்பெண்ணின் மறைவு உணவுப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.