தீபாவளி நெருங்கி வந்துவிட்டது இன்னும் ஒரு சில தினங்கள் தான் இருக்கின்றன. இப்போதே எல்லா பக்கமும் கலைகட்ட ஆரம்பித்துவிட்டது. சிறுவர் சிறுமியர்கள் எல்லாம் பட்டாசு வெடிக்க தொடங்கி விட்டனர். தீபாவளி என்றாலே பட்டாசு புத்தாடைகள் இனிப்பு மற்றும் பலகாரங்கள்தான். ஒவ்வொரு வருடமும் அனைத்து மக்களும் எதிர்பார்த்து காத்திருந்து கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான்.
முந்தைய காலத்தில் வீட்டிலேயே பலகாரம் இனிப்புகள் எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் இன்றைய காலகாலத்தில் பலருக்கு பலகாரம் செய்ய தெரிவதில்லை. அதனால் ரெடிமேடாக கடையில் பலகாரங்களை வாங்கி தீபாவளியை கொண்டாடுகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் இனிப்புகள் மற்றும் பலகாரங்களுக்கு பஞ்சமே இல்லை வகை வகையாக விதவிதமாக வண்ண வண்ணமாக பலகாரங்கள் தயாராகிறது.
தீபாவளி வருவதால் இந்த நேரத்தில் தான் பேக்கரி மற்றும் இனிப்பகத்தில் வியாபாரம் அமோகமாக இருக்கும். இதனால் உணவு பாதுகாப்பு துறை இந்த பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டல்ஸ்களுக்கு புது விதியை அறிவித்திருக்கிறது. அது என்னவென்றால் தீபாவளிக்காக தயாராகும் பலகாரங்களில் காலாவதி தேதி கண்டிப்பாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் தயாரிக்கும் இடமும் குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் வெளிய வைத்து தயாரிக்கும் பலகாரங்களுக்கு முறையாக உணவு பாதுகாப்பு துறையிடம் லைசன்ஸ் பெற்று இருக்க வேண்டும். எந்த ஒரு தரம் இல்லாத பொருட்களைக் கொண்டு பலகாரம் செய்திருக்கக் கூடாது. அப்படி கெட்டுப்போன தரம் இல்லாத பொருட்களை வைத்து பலகாரம் செய்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.