supreme Court | உச்சநீதிமன்ற கேண்டீனில் உணவுக் கட்டுப்பாடு.. வெங்காயம், பூண்டு உணவுகளுக்கு தடை விதிப்பு ஏன்

By Keerthana

Published:

டெல்லி: நவராத்திரியையொட்டி உச்ச நீதிமன்றத்தின் கேன்டீனில் உணவு கட்டுபபாடு விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளத.

நவநாத்திரி பண்டிகையையொட்டி 9 நாட்களுக்கு உச்சநீதிமன்ற கேண்டீனில் வெங்காயம், பூண்டு ஆகியவை இல்லாமல் தயாரிக்கப்பட்ட நவராத்திரி உணவு மட்டுமே வழங்கப்படும் என்பது கட்டாய உணவு திணிப்பு என்று சில வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர் .

வழக்கம் போல் தயாரிக்கப்படும் உணவு வகைகளில், கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என்றும் கேன்டீன் என்பது அனைவருக்கும் பொதவானது. அதை சார்ந்த பலரும் உள்ளனர். உணவில் கட்டுப்பாடு விதித்தால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவருக்கு வழக்கறிஞர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

பொதுவாகவே நவராத்திரி பண்டிகையின் போது வெங்காயம், பூண்டு சேர்க்கப்பட்ட உணவுகளை சிலர் சாப்பிட மாட்டார்கள். அந்த வழக்கம் காரணமாக உச்சநீதிமன்ற கேண்டீனில் வெங்காயம், பூண்டு ஆகியவை இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவுகள் விநியோகம் செய்யப்படுவதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவாகரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் வரிசையாக கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். உச்ச நீதிமன்ற கேன்டீனில் உணவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.