Flipkart நிறுவனத்தின் தலைமையகத்தை இந்தியாவுக்கு மாற்ற இருப்பதாக Flipkartஐ கைவசம் வைத்துள்ள வால்மார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அதேபோல் இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட Flipkart திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Flipkart, ஐபிஓ வெளியிட தயாராகி வருவதாகவும் 2025 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனத்தின் ஐபிஓ வெளியாகும் என்றும், அவ்வாறு வெளியானால் பங்குச்சந்தையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி வால்மார்ட் தலைமையாக தான் இந்தியாவுக்கு மாற்றுவதற்கான முயற்சியை எடுத்துள்ளதாகவும் இதற்கான அனுமதியும் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 36 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆன்லைன் இ காமர்ஸ் நிறுவனமாக விளங்கும் Flipkart வெளியிட போகும் ஐபிஓ நிச்சயம் மிகப்பெரிய வெளியீடாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. Flipkart ஐபிஓ வெளியிட்டால் தற்போது முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் ஐபிஓக்களை பின்னுக்கு தள்ளிவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக நுகர்வோர் நிறுவனங்களின் ஐபிஓக்கள் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்தான் Flipkart நிறுவனமும் ஐபிஓவை வெளியிட ஆர்வம் காட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. Flipkart நிறுவனத்தின் ஐபிஓ வெளியானால் நிச்சயம் பங்குச்சந்தையில் இருப்பவர்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளை மிகவும் ஆர்வமாக வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.