அதன் பிறகு மீண்டும் குழந்தையை அந்த விமான பணிப்பெண் தாயிடம் சேர்த்தார். அப்போது பிரியங்கா, தனது குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் விமானத்தில் குரல் கொடுத்து, விமான ஊழியர்களிடம் தங்கச் சங்கிலி காணவில்லை என்றும், பாத்ரூமுக்கு அழைத்துச் சென்ற விமான ஊழியர் மீதே சந்தேகம் உள்ளதாகவும் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, விமானம் தரையிறங்கியதும் அவர் காவல்துறையில் புகார் அளித்தார். போலீசார் அந்த விமான பணிப்பெண்ணிடம் விசாரணை செய்தனர். அவரையும், அவருடைய உடமைகளையும் சோதனை செய்தபோது எந்தவிதமான தங்கச் சங்கிலியும் பறிமுதல் செய்யப்படவில்லை.
பாத்ரூமில் ஒளித்து வைக்கப்பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் அங்கும் தங்கச் சங்கிலி கிடைக்கவில்லை. எனவே, விமானத்திலேயே தங்கச் சங்கிலி எவ்வாறு மாயமானது என்பது குறித்து போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
உண்மையிலேயே அந்த குழந்தை தங்கச் சங்கிலி அணிந்து இருந்தாரா? அந்த தாய் பொய் சொல்கிறாரா? அல்லது விமான பணிப்பெண் வேறு ஏதாவது இடத்தில் தங்க சங்கிலியை மறைத்து வைத்து நாடகம் நடத்துகிறாரா என்பது தெரியாமல் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.