முதல் சம்பளம் ரூ.2500.. இன்று ரூ.40,967 கோடிக்கு சொந்தக்காரர்.. ஆஸ்திரேலியாவில் கலக்கும் இந்தியர்..!

  ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர் ஒருவர் முதல் சம்பளமாக ரூ.2,500 மட்டுமே பெற்ற நிலையில், இன்று அவர் ரூ.40,967 கோடிக்கு சொந்தக்காரர் என்றும் ஆஸ்திரேலியாவின் மிகப்பணக்கார இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் தான்…

sekhar

 

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர் ஒருவர் முதல் சம்பளமாக ரூ.2,500 மட்டுமே பெற்ற நிலையில், இன்று அவர் ரூ.40,967 கோடிக்கு சொந்தக்காரர் என்றும் ஆஸ்திரேலியாவின் மிகப்பணக்கார இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் தான் விவேக் சேகல்.

விவேக் சேகல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1975 ஆம் ஆண்டு, தனது தாயுடன் இணைந்து மதர்சன் குழுமம் என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கினார்.

ஆரம்பத்தில், இவர் வெள்ளி வர்த்தகத்தில் கவனம் செலுத்திய நிலையில், காலப்போக்கில் இந்த நிறுவனம் கார் மற்றும் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தி துறையில் ஈடுபட்டது. இதனை அடுத்து, உலக அளவில் சிறந்த வாகன உதிரி பாக நிறுவனமாக வளர்ந்தது.

அதன் பிறகு, அவர் SAMIL என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இது BMW, Ford, Mercedes, Toyota, மற்ற்ம் Volkswagen போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியமான உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுத்தது. இந்த நிறுவனத்தில் அவருடைய மகன் இயக்குநராக பொறுப்பேற்றார்.

இதனை அடுத்து, விமான தொழில் துறையிலும் தனது பங்கை ஈடுபடுத்தினார். ஏர்பஸ் கமர்சியல் ஏர்கிராப்ட் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் வழங்கும் நிறுவனமாகவும், அதன் துணை நிறுவனமான CIM Tools India நிறுவனத்துடனும் ஒப்பந்தங்கள் செய்துள்ளது.

அடுத்து, பெங்களூரில் உள்ள நிறுவனத்தின் கிளையில் விமான உதிரி பாகங்களும் தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு தொழில்களை விரிவுபடுத்தியதன் மூலம், இன்று உலகளவில் முன்னணி உதிரி பாக நிறுவனமாக விவேக் சேகல் நிறுவனங்கள் இருப்பதை அடுத்து, அவருடைய சொத்து மதிப்பும் கணக்கின்படி ரூ.40,967 கோடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படித்து பட்டம் பெற்ற பின்னர் வெறும் ரூ.2,500 சம்பளத்தில் தனது வாழ்க்கையை தொடங்கிய விவேக் சேகல், இன்று ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பணக்காரராக அவர் வளர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.