கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி 2022 ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகளைக் கடந்து நம்முடன் பயணிக்கிறது.
கொரோனாத் தொற்றிற்கு பெரிய அளவில் மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் தடுப்பு மருந்துகளும், தக்க பாதுகாப்பு நடைமுறைகளுமே கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுக்குள் வைப்பதாய் உள்ளது.
பாதுகாப்பு நடைமுறையின் முக்கிய அம்சங்களில் ஒன்று மாஸ்க் அணிதல். தற்போது இதுகுறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு தயாராகிவரும் மக்கள் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க அதிக அளவில் வெளியிடங்களில் நடமாடி வருகின்றனர்.
இப்படி நடமாடுவோர் மாஸ்க் இல்லாமல் வருவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மாஸ்க்கின் கட்டாயத்தை வலியுறுத்தும் வகையில் வீட்டை விட்டு வெளியே பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் மாஸ்க்கினை அணிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும் மாஸ்க் அணியாமல் வருவோருக்கான அபராதம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாஸ்க் அணிந்து வருவோர் மூக்கு மற்றும் வாய் முழுமையாக மூடும்படி அணியாவிட்டாலும் 500 ரூபாய் அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஆணையின் இந்த அறிவிப்பையொட்டி சுகாதாரச் செயலாளர் இன்றில் இருந்தே 500 ரூபாயாக வசூலிக்க உத்தரவினையும் பிறப்பித்துள்ளார்.