பட்ஜெட்ல என்னென்ன இருக்கு? சமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா மத்திய பட்ஜெட்?

By John A

Published:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பா.ஜ.க இந்த முறை தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்து மீண்டும் 3-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மேலும் மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகால சாதனைகள் மற்றும் பட்ஜெட்டில் அறிவித்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றை விளக்கியபின் பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுபட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்முவிடம் வாழ்த்து பெற்ற பின், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நடைபெற்ற பின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிர்மலா சீதாராமன் இது 7-வது முறையாகத் தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும்.

இனி மெட்ரோவில் பயண டிக்கெட்களைப் பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை… ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும்…

பட்ஜெட்டில் தனிநபர் வருமான உச்ச வரம்பு, விவசாயிகளுக்கான அறிவிப்புகள், மூலதனச் செலவு, கட்டமைப்பு போன்றவை குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு :

  • இலவச உணவு தானியத் திட்டங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டடிருக்கிறது.
  • மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டில் உயர்கல்வி பயில 10 லட்சம் கடன்
  • நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்களின் கல்வக் கடன் வட்டி தள்ளுபடி
  • அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 4.1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க இலக்கு
  • நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்து 4% சரிவடையும்.
  • கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • வேளாண்மை, வேலைவாய்ப்பு, மனித வளம் மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம்
  • இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம். அடுத்த இரு ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகள் இயற்கை வேளாண்மையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
  • இளைஞர்களின் நலனுக்காக 5 சிறப்புத் திட்டங்கள் உருவாக்கம்
    வேளாண்மைத் துறைக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
  • முதன்முறை பணியில் சேர்பவர்களுக்கு வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத் தொகையாக ஒரு மாத ஊதியம் 3 தவணைகளாக வழங்கப்படும்
  • 20 லட்சம் இளைஞர்களை பணித் திறனோடு உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் 1000 பணி மையங்கள் ஏற்படுத்தப்படும்
  • பீகார், ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை மேம்படுத்த சிறப்புத்திட்டங்கள்