மங்களூரில் இருந்து லடாக்கிற்கு ஹீரோ ஸ்ப்ளெண்டரில் சென்ற தந்தை – மகன்.. வீடு திரும்பியதும் ஹீரோ நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி..

ஹீரோ ஸ்ப்ளெண்டர் இந்தியாவில் நீண்ட காலமாக அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள் என்பது பைக் பிரியர்கள் பலருக்கு தெரிந்தது. இது பெரும்பாலானோரின் விருப்பத்திற்கு உரிய பைக் ஆக இருப்பதற்கு மலிவு விலை, நம்பகத்தன்மை மற்றும்…

splender

ஹீரோ ஸ்ப்ளெண்டர் இந்தியாவில் நீண்ட காலமாக அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள் என்பது பைக் பிரியர்கள் பலருக்கு தெரிந்தது. இது பெரும்பாலானோரின் விருப்பத்திற்கு உரிய பைக் ஆக இருப்பதற்கு மலிவு விலை, நம்பகத்தன்மை மற்றும் சிறந்த எரிபொருள் திறன் ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும். அதேபோல் பராமரிப்பு செலவுகள் குறைவாக இருக்கும் என்பதும், மோசமான சாலைகளில் கூட அருமையாக பயணம் செய்யலாம்.

25 ஆண்டு பழைய ஸ்ப்ளெண்டரில் ஒரு சாகசப் பயணம்:

இந்த நிலையில் ஒரு ஸ்ப்ளெண்டர் உரிமையாளருக்கு ரூ.13 லட்சம் மதிப்புள்ள ஒரு புதிய மோட்டார் சைக்கிளை ஹீரோ நிறுவனம் பரிசாக வழங்கியது. அதற்கு காரணம் என்னவென்றால், ஒரு தந்தையும் மகனும் கர்நாடகாவின் மங்களூருவிலிருந்து லடாக் வரை தங்கள் 25 வருட பழைய ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கில் ஒரு அசாதாரண பயணத்தை தொடங்கினர். இது நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்தது.

ஸ்ப்ளெண்டர் ஒரு எளிமையான பைக் என்றாலும், அவர்களின் இந்த தொலைதூர பயண சாதனை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை மிகவும் கவர்ந்தது. அதனால் அந்த இருவருக்கும் ஒரு ஆச்சரியமான பரிசை வழங்க முடிவு செய்தனர்.

பரிசு: ஒரு லிமிடெட் எடிஷன் மோட்டார் சைக்கிள்:

ஹீரோ மோட்டோகார்ப் அந்த இருவருக்கும் ஒரு அரிய வகை மோட்டார் சைக்கிளை பரிசாக வழங்கியது. இதன் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிறுவனர் பிரிஜ்மோகன் லால் முஞ்சாலின் 101வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் (Hero Karizma XMR) மாடலை அடிப்படையாக கொண்டு இந்த லிமிடெட் எடிஷன் பைக் உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் வெறும் 100 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றில், சுமார் 25 யூனிட்கள் ஹீரோவின் குழுவினருக்கு மட்டுமே வழங்கப்பட்டன. மீதமுள்ள 75 யூனிட்கள் ஏலம் விடப்பட்டு, சுமார் ரூ.8.6 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

ஷோரூமில் ஒரு மறக்க முடியாத தருணம்:

தந்தையும் மகனும் ஒரு ஹீரோ ஷோரூமுக்கு அழைக்கப்பட்டனர், அங்கு அவர்களுக்கான சிறப்புப்பரிசு காத்திருந்தது. அது ஒரு மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் மறக்க முடியாத தருணமாக இருவருக்கும் அமைந்தது.