குடும்பத்துடன் டிவி பார்க்கும் போது திடீரென ஆபாச காட்சிகள் .. தடுத்து நிறுத்துகிறது AI..!

By Bala Siva

Published:

 

குடும்பத்துடன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது, திரைப்படத்தில் அல்லது வெப் தொடர்களில் திடீரென ஆபாச காட்சிகள் வந்தால், அதை டிவியில் உள்ள ஏ.ஐ. சென்சார் தடுத்து நிறுத்தி மங்கலாக காட்டும் வகையில் தனித்தன்மை கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசதி ஜியோ டிவியில் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், குடும்பத்துடன் டிவி பார்க்கும் போது எந்தவித பயமும் இல்லாமல் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜியோ டிவி தற்போது ஏ.ஐ. சென்சார் கொண்ட வசதியை கொண்டுள்ள நிலையில், இந்த டிவி ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு வசனத்தையும் ஆய்வு செய்கிறது. குடும்பத்தோடு டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென திரைப்படத்தில் அல்லது வெப் தொடரில் அல்லது தொலைக்காட்சி தொடரில் படுக்கையறை காட்சிகள் உள்ளிட்ட ஆபாச காட்சிகள் வந்தால், உடனே அந்த காட்சிகளை மங்கலாக மாற்றம் செய்து ஆடியோவையும் மியூட் செய்கிறது.

இதன் காரணமாக, குடும்பத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளுடன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது, அசௌகரியம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு அடல்ட் கன்டென்ட் வந்தாலும் அதனை சென்சார் செய்து பிளர் செய்யும் வகையில், ஆடியோவை மியூட் செய்யும் வகையில் ஏ.ஐ. செயல்படுவதாகவும்  தற்போது இந்த வசதி ஜியோ டிவி மட்டுமே இந்த வசதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மனிதன் ஆச்சரியப்படத்தக்க வகையில் பலவிதமான வேலைகளை ஏஐ செய்து வரும் நிலையில், தற்போது   திரைப்படங்களை சென்சார் செய்யும் அதிகாரி போல் ஏ.ஐ. செயல்பட்டு வருகிறது என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.