குடும்பமே திடீரென காணவில்லை.. தமிழகம் உள்பட 3 மாநில போலீசார் தேடல்..!

  பெங்களூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக திடீரென காணாமல் போனதை அடுத்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில காவல்துறை இணைந்து அந்த குடும்பத்தை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக…

missing

 

பெங்களூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக திடீரென காணாமல் போனதை அடுத்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில காவல்துறை இணைந்து அந்த குடும்பத்தை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் என்ற பகுதியைச் சேர்ந்த நிஷாந்த், அவருடைய மனைவி சந்தனா மற்றும் 10 வயது மகன் ஆகிய மூவரும் மார்ச் இரண்டாம் தேதி ஒரு ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்தனர். ஆனால், திடீரென அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளை ரிசார்ட்டில் விட்டுவிட்டு காரில் சென்றதாகவும், அதன் பிறகு அவர்கள் எங்கே சென்றார்கள் என்றே தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர்கள் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மூன்று பேர் குறித்த எந்த தகவலும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, பெங்களூர் காவல் துறை கண்காணிப்பாளர், அந்த குடும்பத்தினர் தங்கியிருந்த ரிசார்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில், நிஷாந்த் போலியான அடையாள அட்டை காண்பித்து முன்பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் வேலை இல்லாதவர் என்பது அடுத்த கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், கடன் சுமை காரணமாக அவர் தப்ப முயற்சி செய்திருக்கலாம் என்றும், அல்லது கடன் காரர்கள் யாராவது அவரையும் அவரது குடும்பத்தினர்களையும் கடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மற்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடர்ந்த காட்டுப் பகுதியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில காவல்துறையினர் இணைந்து அவர்கள் காட்டுக்குள் மறைந்திருக்கிறார்களா என்பதை தேடி வருகின்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.