அஸ்ஸாமில் உள்ள Garbhanga காடுகளில் உள்ள நீர்வீழ்ச்சியின் அருகே, பிரபல நடிகர் ரோகித் பாஸ்ஃபோர் மர்மமாக முறையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரோகித் சில மாதங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து கெளஹாத்திக்கு திரும்பியிருந்தார். ஞாயிறு பிற்பகல் சுமார் 12.30 மணிக்கு நண்பர்களுடன் அஸ்ஸாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணத்திற்கு சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் மாலைப்பொழுதில் அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சில மணிநேரங்களில், ஒரு நண்பர் ரோகித்துக்கு நேர்ந்த விபத்து குறித்து தகவல் தெரிவித்தார். ரோகித் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
தற்போது, ரோகித்தின் குடும்பம் இது கொலையா? சந்தேகம் எழுப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கார் பார்க்கிங் தகராறில், ரஞ்சித் பாஸ்ஃபோர், அசோக் பாஸ்ஃபோர் மற்றும் தரம் பாஸ்ஃபோர் ஆகியோர் ரோகித்தை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமர்தீப் என்ற ஜிம் உரிமையாளரும் சந்தேகத்தில் உள்ளார். அவரே இந்த சுற்றுலாவிற்கான அழைப்பை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, “ரோகித்தின் உடலில் பல காயங்கள் காணப்பட்டன. தலை, முகம் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல் சுவடுகள் உள்ளன. கெளஹாத் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பல்வேறு காயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு சந்தேகப்படுப்பவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றனர்.