பல்லை பிடுங்கி கண்ணாக மாற்றிய மருத்துவர்கள்.. 10 ஆண்டுக்கு பின் பார்வை பெற்ற பெண்..!

  கண்பார்வை இல்லாத ஒரு பெண்ணின் பல்லை பிடுங்கி, அதை கண்பார்வை தரும் திசுக்களாக மாற்றியதில், ஒரு இளம் பெண் பார்வை பெற்ற சம்பவம் கனடாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, கண்பார்வை இல்லாதவர்களுக்கு மாற்று…

eye teeth

 

கண்பார்வை இல்லாத ஒரு பெண்ணின் பல்லை பிடுங்கி, அதை கண்பார்வை தரும் திசுக்களாக மாற்றியதில், ஒரு இளம் பெண் பார்வை பெற்ற சம்பவம் கனடாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, கண்பார்வை இல்லாதவர்களுக்கு மாற்று கண் பொருத்துவதே ஒரே தீர்வாக இருந்தது. ஆனால், இறந்தவர்களிடமிருந்து கிடைக்கும் மாற்று கண்கள் போதுமான அளவில் இல்லாததால், பலர் வருட கணக்கில் கண்ணுக்கு காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பற்கள் மூலம் பார்வை காணும் அறுவை சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் அறியப்படாத புதிய அறுவை சிகிச்சையாகவே கருதப்படுகிறது.

கண் மருத்துவர்கள் கூட இன்னும் அதிகம் அறியாத இந்த பல்-கண் அறுவை சிகிச்சையைப் பற்றிய தகவலை கனடாவை சேர்ந்த பெண் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதன்படி, நோயாளியின் பற்களில் ஒன்றை அகற்றி, அதை செவ்வகமாக மாற்றி, ஒரு துளை செய்து அதில் சிறிய பிளாஸ்டிக் ஆப்டிகல் லென்ஸ் பொருத்துவர். பின்னர், அந்த பல் மீண்டும் நோயாளிக்கு பொருத்தப்படும்.

அது மூன்று மாதங்கள் வரை அங்கே இருக்கும். அதன் பிறகு, அந்த பல்லில் கண்பார்வைக்கு தேவையான புதிய திசு உருவாகும். இந்த திசு கண்பார்வையை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு, பின்னர் கண்ணின் மேற்பரப்பில் உள்ள மேல் அடுக்கு நீக்கப்பட்டு, இந்த மென்மையான திசு அங்கு வைக்கப்படும். இதன் மூலம், படிப்படியாக நோயாளிக்கு பார்வை கிடைக்கும்.

இந்த வகை அறுவை சிகிச்சையின் மூலம் தான் தனது கண்பார்வை மீண்டும் பெற்றதாக அந்த கனடா இளம்பெண் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.