ரிசைன் செய்ய மறுத்த ஊழியரை 4 நாட்கள் இருட்டில் பூட்டி வைத்த நிறுவனம்.. அதிர்ச்சி தகவல்..!

By Bala Siva

Published:

சீனாவில் உள்ள நிறுவனம் ஊழியர் ஒருவர் ரிசைன் செய்ய மறுத்ததை அடுத்து அவரை நான்கு நாட்கள் இருட்டு அறையில் பூட்டி வைத்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவை சேர்ந்த நிறுவனம் சில ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அதில் ஒருவர் வேலையை விட்டு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த ஊழியருக்கு ஸ்பெஷல் ட்ரைனிங் என்று சொல்லி அவருடைய அறையை வேறு இடத்திற்கு மாற்றி உள்ளனர்.

மாற்றப்பட்ட அறையில் கம்ப்யூட்டர், இன்டர்நெட் என எந்த வசதியும் இல்லை என்றும் கரண்ட் கூட இல்லை என்று கூறப்படுகிறது. அந்த ஊழியர் அந்த அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அவருடைய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

நான்கு நாட்கள் அறையிலேயே பூட்டப்பட்டிருந்த நிலையில் தான் ஐந்தாவது நாள் அவருடைய மனைவி காவல்துறையில் புகார் அளித்த நிலையில் போலீசார் அதிரடியாக அலுவலகத்தில் சோதனை செய்தபோது தான் நான்கு நாட்கள் அந்த ஊழியர் பூட்டப்பட்டு கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் பூட்டப்பட்டு ஊழியருக்கு நஷ்ட ஈடு கொடுக்க அந்த நிறுவனம் முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags: china, locked, staff