இ.எம்.ஐ, பர்சனல் லோன்.. கடன் வாங்கியவர் இறந்து விட்டால் யார் பொறுப்பு..!

By Bala Siva

Published:

 

டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை தவணை முறையில் வாங்கினாலோ அல்லது பர்சனல் லோன் வாங்கினாலோ கடன் வாங்கிய நபர் இறந்து விட்டால் அந்த கடனுக்கு யார் பொறுப்பு என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் அந்த கடனுக்கு யார் பொறுப்பு என்பது குறித்த விதிகளில் பல மாறுபட்டு உள்ளது. பெரும்பாலான விதிகளின்படி கடன் வாங்கியவரின் வாரிசு தான் கடனை கட்ட வேண்டும் என்று விதிமுறை கூறுகிறது.

வீட்டு கடனை பொறுத்தவரை கடன் வாங்கியவர் இறந்து விட்டால் கடன் வாங்கியவரின் வாரிசு செலுத்த வேண்டும். வாரிசு செலுத்தவில்லை என்றால் வீட்டை வங்கி விற்று கடனை எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. மீதி தொகை இருந்தால் அது குடும்பத்திற்கு திரும்ப செலுத்தப்படும்.

ஆனால் அதே நேரத்தில் தனிநபர் கடன்களில் விதி மாறுபட்டது. தனிநபர் கடனை பொறுத்தவரை கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் அந்த நபரின் வாரிசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அந்த கடனும் முடக்கப்படும். அதேபோல் கிரெடிட் கார்டு கடன்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கிரெடிட் கார்டில் கடன் வாங்கியவர் இறந்து விட்டால் வாரிசு அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்த கடனை வங்கியை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிகிறது.

கார் பைக் போன்ற வாகனங்களை கடனில் வாங்கியவர் இறந்து விட்டால் இறந்த நபரின் குடும்பம் கடனை தொடர்ந்து செலுத்த வலியுறுத்தப்படும். குடும்ப உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தால் காரை விற்று கடன் அடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடன் வாங்கும் போது கடன் வாங்கியவர் காப்பீடு செய்திருந்தால் அந்த நபர் இறந்தால் கடன் வாங்கியவரின் குடும்பம் கடனை திருப்பி செலுத்த வேண்டிய அவசியமில்லை. காப்பீடு பிரிமியத்திலிருந்து நிலுவை தொகையை வாங்கி கடன் தொகையை வங்கிகள் மீட்டெடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: credit, emi, loan