எலான் மஸ்க் அறிமுகம் செய்யும் ‘X-Mail.. G-Mail’ க்கு பாதிப்பு ஏற்படுமா?

  உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்க் ட்விட்டர் இணையதளத்தை வாங்கி அதை எக்ஸ் என மாற்றி, தற்போது அதில் குரூக் என்ற ஏஐ டெக்னாலஜியையும் அறிமுகம் செய்த நிலையில், தற்போது ஜிமெயிலுக்கு…

 

உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்க் ட்விட்டர் இணையதளத்தை வாங்கி அதை எக்ஸ் என மாற்றி, தற்போது அதில் குரூக் என்ற ஏஐ டெக்னாலஜியையும் அறிமுகம் செய்த நிலையில், தற்போது ஜிமெயிலுக்கு மாற்றாக X-மெயில் என்பதை விரைவில் கொண்டு வர இருப்பதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அரசின் முக்கிய நபராக மாறப் போகும் எலான் மஸ்க் புதுப்புது விஷயங்களை கையாண்டு வருகிறார். அந்த வகையில், ஜிமெயில் மென் பொருளுக்கு மாற்றாக X-மெயில் என்ற மென்பொருளை அவர் புதிதாக அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, எலான் மஸ்க் அவர்கள் தனது சமூக வலைதளத்தில், விரைவில் X-மெயில் அறிமுகமாகும் என்னுடைய நீண்ட கால கனவு செயல்திட்டங்களில் ஒன்று இது என்றும் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே ஐபோனுக்கு மாற்றாக புதிய போன் கொண்டு வரப் போவதாக கூறியுள்ள நிலையில், தற்போது ஜிமெயிலுக்கு மாற்றாகவும் X-மெயில் என்ற ஒரு மென்பொருளை அவர் கொண்டு வருகிறார்.

எலான் மஸ்க் தொட்டதெல்லாம் வெற்றியாகி வரும் நிலையில், போதாக்குறைக்கு அமெரிக்க அரசும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், X-மெயில் புதுவரவு காரணமாக உலகில் பில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வரும் ஜிமெயிலுக்கு ஆபத்து வருமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.