இன்று பல X பயனர்கள் X சேவையில் தடங்கல் ஏற்பட்டதாக புகார் தெரிவித்தனர். ஆன்லைன் சேவை தடங்கல்களை கண்காணிக்கும் Downdetector என்ற இணையதளத்தில், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் ஆயிரக்கணக்கான புகார்கள் பதிவாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை X நிறுவனம் இதற்கான பதிலை வழங்கவில்லை.
பயனர்கள் தங்களது X பக்கத்தை பயன்படுத்த முயன்ற போது, “எதோ தவறு ஏற்பட்டுள்ளது, மீண்டும் லோட் செய்ய முயலுங்கள்” என்ற செய்தியை சந்தித்தனர்.
Downdetector டேட்டாவின்படி அமெரிக்காவில் மட்டும் 57% பயனர்கள் தங்கள் மொபைல் பயன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டதாக, 34% பேர் இணையதளத்தில் பிரச்சனை இருப்பதாகவும் 9% பயனர்கள் சர்வர் தொடர்பான சிக்கலை சந்தித்ததாகவும் குறிப்பிட்டனர்.
பிரிட்டனில் 61% பயனர்கள் மொபைல் பயன்பாட்டில், 34% இணையதளத்தில், மற்றும் 5% சர்வர் பிரச்சனை ஏற்பட்டதாக புகார் தெரிவித்தனர். X பயனர் ஒருவர், ‘எனக்கு X பக்கம் வேலை செய்யவில்லை, உங்கள் அனைவருக்கும் வேலை செய்கிறதா என பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பயனர், “எனக்குத் தெரிந்து X செயல்படவில்லை. இதைப் பற்றி பதிவிட வேறு இடமில்லாமல் இங்கு வந்துவிட்டேன் என Metaவுக்கு சொந்தமான Threads பயன்பாட்டில் கூறியுள்ளார்.
இது ஹேக்கர்களின் கைவரிசையாக இருக்கும் என்றும், எலான் மஸ்க் கோட்டையிலேயே ஹேக்கர்கள் புகுந்துவிட்டார்களா? எனவும் சிலர் பதிவு செய்து வருகின்றனர்.