எலான் மஸ்க்கிற்கே ஆப்பு வைக்கும் அம்பானியின் திட்டம்.. 2025ல் ஒரு புதிய புரட்சி..!

By Bala Siva

Published:

 

இந்தியாவில் சாட்டிலைட் போன் அறிமுகம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ள நிலையில், ரோபோ பிசினஸில் ஈடுபட முகேஷ் அம்பானி திட்டமிட்டு,  எலான் மஸ்க்கிற்கே பதிலடி கொடுக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முகேஷ் அம்பானி சமீபத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்த நிலையில்,   மனிதனைப் போலவே அச்சு அசலாக ரோபோக்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து 2025 ஆம் ஆண்டு மனிதன் போலவே ரோபோக்களை உருவாக்கவும், இந்த ரோபோக்கள் பேஷன், ரீடெயில், மற்றும் எனர்ஜி துறைகளில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ரோபோ பிசினஸில் உலக அளவில் முன்னணி இடத்தில் இருக்கும் டெஸ்லா நிறுவனத்திற்கு கடும் போட்டியாக முகேஷ் அம்பானியின் ரோபோ நிறுவனம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பேஷன் துறையில் புதுப்புது வகையான குவாலிட்டியை கொண்டு வரவும், ரீடெயில் துறையில் கஸ்டமர்களுக்கு உதவி செய்யவும், எனர்ஜி துறையில் தினசரி வேலைகள் மற்றும் மெயின்டனன்ஸ் செய்யவும் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு இறுதியில் இந்த ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே உலக அளவில் எலான் மஸ்கின் டெஸ்லா உள்ளிட்ட சில நிறுவனங்கள் ரோபோக்களை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அம்பானியின் நிறுவனம் உலக அளவில் கடும் சவாலை கொடுக்கும் ஒரு நிறுவனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.