தமிழக அரசியல் களத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாஜகவுடனான அதன் உறவு குறித்து சில ஆழமான கருத்துகள் எழுந்துள்ளன.
பாஜக கூட்டணியால் அதிமுகவுக்கு அழிவு” என்று திமுகவால் ஏவப்பட்ட பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை, அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதிமுகவின் முக்கிய தலைவர்களாக இருந்த சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் போன்றோரை கட்சியை விட்டு வெளியேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி. இது அவரது அரசியல் சாமர்த்தியத்தையும், கட்சியின் மீது அவருக்குள்ள அசைக்க முடியாத பிடியையும் காட்டுகிறது. “எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் ஒரு ஆளே இல்லை,” என்று சிலர் குறைத்து மதிப்பிட்டாலும், அவர்களைத் தாண்டி கட்சியை வலுவாக வழிநடத்திச் சென்றுள்ளார்.
“எடப்பாடி பழனிச்சாமியை பயமுறுத்தி காரியத்தைச் சாதிக்கலாம் என்றால், அது நடக்கவே நடக்காது” என்பது அமித்ஷாவுக்கே இப்போது புரிந்திருக்கும். அவரது உறுதியான நிலைப்பாட்டை பார்த்து அமித்ஷாவே இவர் எந்தவித அச்சுறுத்தலுக்கும் பணிய மாட்டார் என்பதை புரிந்து கொண்டிருப்பார்.
அதிமுகவுடன் அனுசரித்து போனால் மட்டுமே தமிழ்நாட்டில் பாஜக ஓரளவு வளர முடியும். இல்லையென்றால், பாஜக மீண்டும் நோட்டாவுடன் போட்டி போட வேண்டிய நிலை ஏற்படும் என்பது கண்கூடாக தெரிகிறது. இந்த உண்மை பாஜக தலைமைக்கு நன்றாக தெரியும் என்பதால்தான், இனிமேல் அவர்கள் “கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்” என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல” என்று தங்கள் முடிவை எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இது பாஜகவுக்கு அவர் விடுத்த தெளிவான எச்சரிக்கையாகும். இனிமேல் தமிழ்நாட்டில் பாஜக அடக்கி வாசிப்பதுதான் அந்தக் கட்சிக்கு நல்லது.
ஒருவேளை பாஜக தனது நிலைப்பாட்டில் மாற்றம் செய்யாமலோ அல்லது அதிமுகவின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காமலோ இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி மாற்று கூட்டணியை அமைக்க தயங்க மாட்டார். பாஜகவை கழட்டிவிட்டு, விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள எடப்பாடி தயங்க மாட்டார்.” அப்படி நடந்தால், பாஜக தமிழ்நாட்டில் அரசியல் அனாதையாகிவிடும். தனித்து நின்று ஒரு தொகுதியில் கூட அந்த கட்சியால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்ற நிலை ஏற்படும்.
எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் சதுரங்கத்தில் அடுத்தடுத்த காய்களை நகர்த்தி, அதிமுகவின் பலத்தையும், தனது தலைமைத்துவத்தையும் நிலைநாட்ட முனைப்புடன் செயல்படுகிறார். அவரது இந்த உறுதியான நிலைப்பாடு, தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
