ஆட்டோவின் மேல் பகுதியில் பள்ளி குழந்தைகளை அழைத்து சென்ற டிரைவர்.. அதிர்ச்சி வீடியோ..!

பேருந்து மற்றும் ரயில்களில் டாப் பகுதியில் சில சமயம் பயணிகள் பயணம் செய்வதை பார்த்திருக்கிறோம், ஆனால் ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஆபத்தான முறையில் மேல் பகுதியில் உட்கார வைத்து ஏற்றிச் சென்ற டிரைவர் குறித்த…

auto

பேருந்து மற்றும் ரயில்களில் டாப் பகுதியில் சில சமயம் பயணிகள் பயணம் செய்வதை பார்த்திருக்கிறோம், ஆனால் ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஆபத்தான முறையில் மேல் பகுதியில் உட்கார வைத்து ஏற்றிச் சென்ற டிரைவர் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்றுள்ள நிலையில் இரண்டு பள்ளி குழந்தைகளை ஆட்டோவின் மேல் பகுதியில் உட்கார வைத்து சென்றுள்ளார். அதுவும் அவர் ஆட்டோவை வேகமாக இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில் சாலையில் இருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு புகார் அளித்தனர். மேலும் சிலர் இந்த ஆட்டோவை வீடியோ எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து பள்ளி குழந்தைகளை இவ்வளவு ஆபத்தான முறையில் கொண்டு செல்வதை எப்படி அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரை ஒரு சில மணி நேரத்தில் கண்டுபிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆபத்தான முறையில் ஆட்டோவில் அழைத்துச் செல்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தர பிரதேச மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Video: https://x.com/priyarajputlive/status/1822577075766657310