இ-சிகரெட் பயன்படுத்திய இளம்பெண்.. 2 லிட்டர் கருப்பு ரத்தம்.. அதிர்ச்சியில் டாக்டர்கள்..!

By Bala Siva

Published:

 

இளம்பெண் ஒருவர் தொடர்ந்து அதிகமாக இ-சிகரெட் பயன்படுத்திய நிலையில் அவரது நுரையீரல் உட்பட சில உடல் உறுப்புகளில் 2 லிட்டருக்கு மேல் கருப்பு ரத்தம் இருந்ததாகவும், அதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அடிக்கடி இ-சிகரெட் பயன்படுத்தி வந்ததாகவும், அதற்கு கிட்டத்தட்ட அவர் அடிமையாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், குறிப்பாக நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக, அவருக்கு பயங்கர இருமல் ஏற்பட்டதோடு சுவாச தொற்று உள்பட சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு சென்றபோது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது நுரையீரல் உட்பட சில உறுப்புகளில் கருப்பு ரத்தம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து உடனடியாக அந்த ரத்தத்தை வெளியேற்றியுள்ளனர். இது ‘வெப்பிங் ஜூஸ்’  என இந்த கருப்பு ரத்தத்தை அழைக்கின்றனர்.  அந்த ரத்தத்தை அகற்றிய பின்னர் தான், தற்போது அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.