லட்சியத்தை அடைந்த துர்கா.. தூய்மைப் பணியாளரின் மகள் to நகராட்சி ஆணையர்..வெற்றி வரலாறு..

கல்வி ஒரு தலைமுறையையே மாற்றும் என்பதற்கு அவ்வப்போது சில நெகிழவைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.துர்கா. இவரின் தந்தை சேகர், தூய்மைப் பணியாளர். தாய் வீட்டு வேலைப் பணியாளர்.…

Thiruvarur Durga

கல்வி ஒரு தலைமுறையையே மாற்றும் என்பதற்கு அவ்வப்போது சில நெகிழவைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.துர்கா. இவரின் தந்தை சேகர், தூய்மைப் பணியாளர். தாய் வீட்டு வேலைப் பணியாளர். மிகவும் பின்தங்கிய பொருளாதாரப் பின்னனியைக் கொண்ட துர்கா இன்று திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

துர்கா டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்காக தொடர்ந்து தயாராகிக் கொண்டே வந்திருக்கிறார். எழுதிய தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை என்றாலும், மனம் தளராது தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார். இந்நிலையில் குரூப் 2 தேர்வினை எழுதிய துர்காவிற்கு அவரது முயற்சிக்கு பலன் அளிக்கும் விதமாக அத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். கடுமையான பொருளாதார நெருக்கடி, 2 குழந்தைகளுக்குத் தாய், குடும்பப் பொறுப்பு என அனைத்தையும் எதிர்கொண்டு இன்று சாதித்திருக்கிறார்.

மெக்காவில் பிறந்து இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத்.. கல்வியில் இவ்வளவு சீர்திருத்தங்கள் செய்தது இவரா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தேர்ச்சி பெற்ற துர்காவை பாராட்டியிருந்தார். ஒரு தலைமுறையையே கல்விதான் முன்னேற்றும் என்பதற்கான எடுத்துக்காட்டு துர்கா என அப்பதிவில் தெரிவித்திருந்தார்.

தனது வெற்றிக்குக் காரணம் முயற்சியும், கல்விதான் எனக் கூறும் துர்கா திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றவுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீயைச் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். கல்வி ஒருவரை எந்த அளவிற்கு முன்னேற்றும் என்பதற்கு துர்காவின் சாதனை ஓர் எடுத்துக்காட்டு.