ஏற்கனவே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ரவி தொடர்ச்சியாக தமிழகத்தில் இருக்க வேண்டும்; அப்போதுதான் திமுக ஜெயிக்கும் என்று கூறிய நிலையில், அதே கொள்கையில் தான் அண்ணாமலை தொடர்ச்சியாக பாஜக தலைவராக இருந்தால் திமுகவுக்கு அதிக ஓட்டு கிடைக்கும் என்று கூறியிருப்பதாக தெரிகிறது.
அண்ணாமலை மாற்றப்படப் போகிறார் என்ற செய்தி கசிந்தவுடன், ஏராளமான சமூக வலைதளங்களில் “அவரை மாற்றக்கூடாது” என்றும், “அவரால் தான் பாஜக ஓரளவு வளர்ந்து வருகிறது” என்றும் மெசேஜ்கள் பதிவாகி வருகின்றன.
அண்ணாமலைக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் மெசேஜ்களை டெல்லி ஆய்வு செய்தபோது, “அண்ணாமலை ஆர்மி” அல்லது அவரது ஆதரவாளர்கள் இவை பதிவு செய்திருக்கலாம் என யூகிக்கப்பட்ட நிலையில், திடீரென இவையெல்லாம் வெளிநாட்டில் உள்ள திமுகவினரின் வேலை என்று தெரிய வந்ததால், பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரம் உள்ளிட்ட பல நேரங்களில், திமுகவை காப்பாற்றவும் பிரச்சனைகளை திசைதிருப்பவும் அண்ணாமலை செய்த கோமாளித்தனங்கள் தான் எங்களுக்கு உதவியது என்றும், அதனால் அண்ணாமலை 2026 தேர்தல் வரை பாஜக தலைவராக இருந்தால் தான், “திமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம்” என்று நினைப்பவர்கள் கூட எங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அண்ணாமலையை காமெடியனாக்கி, அவரை தொடர்ச்சியாக பாஜக தலைவராக வைத்திருந்தால்தான் திமுக மீண்டும் வெற்றி பெறும் என்று திமுக பிரமுகர்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.