தீபாவளி தினத்தில் ஒரு மணி நேரம் பங்குச்சந்தை ஓப்பன் ஆகும்.. தயாரா வர்த்தகர்களே..!

By Bala Siva

Published:

 

பொதுவாக அரசு விடுமுறை நாட்களில் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற நிலையில், தீபாவளி அன்று “முகூர்த்த வர்த்தகம்” என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் குறுகிய நேரம் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிக்கும் ஒரு மணி நேரம் வர்த்தகம் செய்ய மார்க்கெட் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்தில் வர்த்தகம் செய்தால் அந்த ஆண்டு முழுவதும் ராசியாக இருக்கும் என்று பல வர்த்தகர்கள் நம்புவதால், தீபாவளி தினத்தில் வர்த்தகம் செய்வது ஒரு வழக்கமாகி விட்டது. இந்த ஆண்டும் முகூர்த்த வர்த்தகம் என்ற பெயரில் நவம்பர் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை பங்குச் சந்தை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மணி நேரத்தில், முகூர்த்த வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தாராளமாக தங்கள் நினைத்த பங்குகளை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக, முகூர்த்த வர்த்தகத்தில் எல்லோரும் பங்குகளை வாங்க மட்டுமே செய்வார்கள்; விற்பனை பெரும்பாலும் இல்லை என்பதால், அந்த ஒரு மணி நேரத்தில் மார்க்கெட் உயரும் என்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல், இந்த ஆண்டும் முகூர்த்த வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவோர் நவம்பர் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை வர்த்தக நேரத்தை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.