தீபாவளி விழாவின் மறுநாளான நவம்பர் 1ஆம் தேதி, தமிழக அரசு அதிகாரபூர்வமாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. இதனால், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக அரசு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இதே நாளில் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் 1ஆம் தேதி விடுமுறைக்கு மாற்றாக, நவம்பர் 9ஆம் தேதி பணி நாளாக அமையும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி கொண்டாட வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைப்பதால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வாய்ப்பு உள்ளது.
முன்னதாகஅரசு ஊழியர்கள் சங்கம் நவம்பர் 1ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கை ஆராயப்பட்டு, தற்போது அதிகாரபூர்வமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.