உலகின் முன்னணி என்டர்டைன்மென்ட் நிறுவனங்களில் ஒன்றான டிஸ்னி, திடீரென 300 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 140 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 300 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. செலவுகளை குறைக்கும் வகையில் இந்த வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வேலை இழந்த ஊழியர்கள் தங்களது சமூக வலைதளங்களில் சோகமாக பதிவிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே முன்னணி நிறுவனங்கள் வேலைநீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பதுடன், லாபம் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் இந்த வேலைநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், முக்கிய காரணமாக செலவுகளை குறைப்பதே கூறப்படுகிறது.
டிஸ்னி நிறுவனத்திலிருந்து வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஒரு ஊழியர், தனது சமூக வலைதளத்தில், “முதல் முதலாக கல்லூரியில் சேரும் போது மகிழ்ச்சி அடைந்தேன். முதல் ப்ரோமோஷன், முதல் ஸ்டேட் விருதுகள் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், முதல் வேலைநீக்க நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன்; இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளது,” என்று கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்ட டிஸ்னி நிறுவனத்தின் வருமானம் குறைந்து வருவதாகவும், எனவே செலவுகளை குறைப்பதற்காக வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.