அரபு நாடுகளில் வாசனை திரவியங்கள் செய்யப் பயன்படும் விலையுயர்ந்த அரிய மரம் ஒன்றினை நீலகிரியில் இருப்பதை வனத் துறையினர் கண்டுபிடித்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது நீலகிரி மாவட்டத்தின் அருகே உள்ள பகுதிதான் நாடுகாணி, இந்தப் பகுதியில் உள்ள காடுகளில் அதிக அளவில் மரம், செடி, கொடிகள் உள்ளன.
நாடுகாணிப் பகுதியில் தாவரவியல் பூங்கா ஒன்று உள்ளது, இந்தப் பூங்காவில்தான் விலையுயர்ந்த மரமான இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த மரத்தின் பெயர் அகர், இந்த மரமானது அரபு தேசத்தில்தான் காணப்படுமாம். இந்த அகர் மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியங்கள் விலையுயர்ந்த வாசனை திரவியங்களாக சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த மரத்தின் கட்டைகளின் சந்தை விலை ஒரு கிலோ 7 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த மரத்தினை நீலகிரிப் பகுதியில் அதிக அளவில் கன்றுகளாக நடவு செய்யும் வேலையில் இறங்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அகர் மரம் குறித்த செய்தி வெளியாக பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வந்து அகர் மரத்தினை வந்து பார்வையிட்டுச் செல்கின்றனராம்.