திருட வந்த இடத்தில் ஒன்னுமே இல்லை.. வாட்டர் பாட்டிலை எடுத்து ரூ.20 வைத்துவிட்டு போன திருடன்..!

ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் திருட வந்த திருடன் திருடுவதற்கு ஒன்றுமே இல்லை என்றவுடன் ஒரு வாட்டர் பாட்டிலை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கு 20 ரூபாயை மேஜை மீது வைத்து விட்டு சென்ற…

theif 1

ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் திருட வந்த திருடன் திருடுவதற்கு ஒன்றுமே இல்லை என்றவுடன் ஒரு வாட்டர் பாட்டிலை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கு 20 ரூபாயை மேஜை மீது வைத்து விட்டு சென்ற சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் திருடுவதற்காக மாஸ்க் அணிந்த ஒரு திருடன் உள்ளே நுழைந்த நிலையில் கல்லாப்பெட்டி உள்பட பல இடங்களில் திருடுவதற்கு ஒன்றுமே இல்லை என்பது தெரிந்தவுடன் அதிருப்தி அடைந்தார்.

மேலும் ஏதாவது விலை உயர்ந்த பொருள் இருக்குமா என்று அங்கும் இங்கும் தேடிப் பார்த்த நிலையில் எதுவுமே அந்த திருடன் கண்ணில் சிக்கவில்லை. இதனை அடுத்து இறுதியாக பிரிட்ஜை ஓபன் செய்து ஒரு வாட்டர் பாட்டிலை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் பிறகு பர்ஸில் இருந்து 20 ரூபாயை எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு போன காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது.

மறுநாள் காலை உரிமையாளர் இந்த சிசிடிவி வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஓட்டல் உரிமையாளர் அன்றைய தினம் வசூல் ஆகும் பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டு அதன் பிறகு மறுநாள் காலை வங்கியில் அந்த பணத்தை செலுத்தி விட்டு கடை திறக்க வருவாராம். எனவே கடையில் அவர் பணம் எதையும் வைத்திருக்காததால் திருட்டில் இருந்து தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்  பல்வேறு காமெடி கமெண்ட்கள் பதிவு செய்து வருகின்றன.