நேரடி வகுப்புகள் கட்டாயமில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு.. மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

By Gayathri A

Published:

கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி உலக நாடுகள் அனைத்திலும் கோர தாண்டவம் ஆடியது. கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கின் முக்கிய அம்சமாக இருப்பது வொர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் வகுப்புகள்தான். தற்போது கொரோனாப் பேரலையின் மூன்றாவது அலை உலகம் முழுவதிலும் தலை விரித்தாடுகிறது.

இதன் எதிரொலியாக மீண்டும் மாணவர்களின் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால்  10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் என்பதை அரசாங்கம் திட்ட வட்டமாகக் கூறி இருந்தது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்து பொது நல வழக்கு இன்று தீர்ப்புக்கு வந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ் சொல்லும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்படாது என்பதைக் கருத்தில் கொண்டு,  “10, 11 மற்றும் 12 ஆம் வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் பொருட்டே நேரடி வகுப்புகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நேரடி வகுப்புகளில் மாணவர்கள் பங்குபெறுவது கட்டாயமில்லை. மேலும் நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து பள்ளிகளின் முடிவு எடுக்கலாம்.” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

 

Leave a Comment