தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், அவரது முந்தைய சாதனைகள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தோனி சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பது போல், அவரது மகள் ஜீவாவும் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெற்றுவருகிறார். 9 வயதான ஜீவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவரது பக்கத்தில் அழகான புகைப்படங்கள் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தோனியின் மகள் ஜீவா, ராஞ்சியில் உள்ள ஒரு பிரம்மாண்டமான கல்வி நிறுவனமான “Taurian World School” என்ற பள்ளியில் படித்து வருகிறார். இந்த பள்ளி, உலக தரமான கல்வி மற்றும் உள் கட்டமைப்புக்காக புகழ்பெற்றது என்று கூறப்படுகிறது.
கல்வி மட்டும் அல்லாமல், இந்த பள்ளிகளில் சில ஆக்கப்பூர்வமான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக இயற்கை விவசாயம், குதிரை சவாரி போன்றவை மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை கூட்டும் நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன என்று பல பத்திரிகைகள் கட்டுரைகள் எழுதியுள்ளன.
இந்த நிலையில், தோனியின் மகள் படிக்கும் பள்ளியின் கட்டணம் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை ஆண்டுக்கு ₹4.70 லட்சம், ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ₹5.10 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கட்டணத்தை பார்த்து சிலர் கமெண்ட்களில், சென்னை உள்ளிட்ட சில பெரிய நகரங்களில் உள்ள பள்ளிகளின் கட்டணத்தை விட இது குறைவாகவே உள்ளது என்றும், ஆனால் அதே நேரத்தில் அதிக உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் இருப்பதால் இந்த கட்டணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது என்றும் பதிவு செய்து வருகின்றனர்.