நடிகை நயன்தாரா – தனுஷ் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண ஆவணப் படத்தினை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த 19-ம் தேதி வெளியிட்டது. எதிர்பார்த்த வரவேற்பினைப் பெறாவிட்டாலும் ஆவணப் படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்புக் காட்சிகள் சில நொடிகள் இடம்பெற்றதால் அப்படத்தினைத் தயாரித்த தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சியான நயன்தாரா-விக்னேஷ்சிவன் தம்பதிகள் தங்களது சமூக வலை தளப் பக்கங்களில் தனுஷைப் பற்றி சில கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். மேலும் விக்னேஷ் சிவன் அந்த குறிப்பிட்ட காட்சியையும் பதிவிட்டிருந்தார். மேலும் தனுஷுக்கு எதிரான சில வார்த்தைகளையும் நயன்தாரா அதில் பயன்படுத்தி இருந்தார். இவ்விவகாரத்தில் தனுஷுக்கு ஆதரவாக இயக்குநர், இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர். நயன்தாராவிற்கு ஆதரவாகவும் சிலர் நின்றனர்.
வாட்ஸ் அப் போலவே இன்ஸ்டாவிலும் லைவ் லொகேஷன் பகிரும் அம்சம்.. எவ்வளவு நேரம் ஆக்டிவ்வாக இருக்கும்?
இந்நிலையில் சமீபத்தில் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் திருமண நிகழ்விற்கு தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். இருவரும் அருகருகே அமர்ந்தாலும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இந்நிலையில் தனுஷ் நயன்தாரா மீது இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதி மன்ற உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யவும் அனுமதி கோரப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கினை விசாரித்த நீதிபதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.