10 நிமிடம் தாமதமாக டெலிவரி செய்தால் செத்தா போயிடுவோம்.. ஆபத்து விளையாட்டில் டெலிவரி பாய்கள்..!

  டெலிவரி பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்ற முயற்சியில், டெலிவரி பணியாளர்கள் கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டுவதால், விபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் அரசு உடனடியாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்…

delivery boy1 1

 

டெலிவரி பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்ற முயற்சியில், டெலிவரி பணியாளர்கள் கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டுவதால், விபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் அரசு உடனடியாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Zomato,Swiggy, Blinkit, Dominoz போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் டெலிவரி பணியாளர்கள், அதிக வேகத்தில் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுவதாகவும், சாலை விதிகளை மீறி எதிர்பாதையில் பயணிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அவர்கள் அவசரத்தில் இருப்பதால், சாலையில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

நேற்று பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் இதற்குத் தெளிவான உதாரணம். டெலிவரி பணியில் இருந்த ஒரு நபர் தனது இருசக்கர வாகனத்தை கட்டுப்பாட்டின்றி ஓட்டி, வயதான தம்பதியர் மீது மோதி விட்டார். இந்த விபத்தில் அவர்கள் இருவரும் கடுமையாக காயமடைந்தனர். நல்லவேளையாக எலும்பு முறிவு ஏற்படாத நிலையில் இருந்தாலும், அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து, பெங்களூரில் பொதுமக்கள் அரசைத் தொடர்பு கொண்டு, டெலிவரி வாகனங்களுக்கு அதிகபட்சமாக 50 கிமீ வேகத்திற்குள் மட்டுமே செல்லும் விதமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர். டெலிவரி பணியாளர்கள் சாலையில் கட்டுப்பாடற்ற முறையில் செயல்படுவதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகியிருக்கிறது.

இதனைத் தடுக்கும் வகையில், அனைத்து டெலிவரி நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து கட்டாய பயிற்சி அளிக்க வேண்டும். “பத்தே நிமிடத்தில் டெலிவரி” போன்ற இலக்குகளை அமைக்கக் கூடாது. சில நிமிடங்கள் தாமதமானாலும் பெரிய பிரச்சனை ஏற்படாது. டெலிவரி பணியாளர்கள் பயணிக்கும் போது பாதுகாப்பை முக்கியமாகக் கருத வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.