விமான நிலையத்தில் 24 மணி நேர மதுக்கடை.. செல்ப் சர்வீஸ்.. அதிரடி அறிவிப்பு..!

டெல்லி விமான நிலையத்தில் 24 மணி நேரமும் மது வகைகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் உள்ள மூன்றாவது முனையத்தில் 24 மணி நேரமும் மது வகைகளை…

Tasmac Liquor Bottle Recall Scheme to be implemented across Tamil Nadu from September

டெல்லி விமான நிலையத்தில் 24 மணி நேரமும் மது வகைகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் உள்ள மூன்றாவது முனையத்தில் 24 மணி நேரமும் மது வகைகளை கிடைக்கும் என்றும் விமான பயணிகள் மது வகைகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 750 சதுர அடி ஷோரூம் இதற்காக உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் இங்கு வரும் மது பிரியர்கள் செல்ப் சர்வீஸ் மூலம் தங்களுக்கு வேண்டிய பிராண்டை, தேவையான அளவு பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற விமான நிலையத்தில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மது வகைகள் கிடைக்கும் என்ற நிலையில் உள்ள டெல்லியின் மூன்றாவது விமான முனையத்தில் மட்டும் 24 மணி நேரமும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் மது வகைகள் கேட்டு அதிக வாடிக்கையாளர்கள் வருவதை அடுத்து இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மது கடையில் அனைத்து இந்திய மற்றும் சர்வதேச பிராண்ட் மது வகைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.