ஒரு நபர் இறந்து விட்டால், அந்த நபரின் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவை தேவைப்படாது என்று நினைத்து தூக்கி போட்டு விட வேண்டாம். அதனால் பல சிக்கல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவை இந்திய குடிமக்களுக்கு கிட்டத்தட்ட கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நபர் இறந்து விட்டால் இந்த இரண்டையும் தூக்கி போட்டு விடாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
இறந்த நபரின் வங்கி கணக்குகளை முடிக்க, டிமேட் கணக்கில் உள்ள பங்குகளை மாற்ற, சில நிதி பரிவர்த்தனைகளை செய்ய இறந்தவரின் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கட்டாயம் தேவைப்படும். இறந்தவர் பெயரில் உள்ள சொத்துக்களை மாற்றுவது, அவர் வாங்கி வைத்த பங்குகளை வாரிசுதாரருக்கு மாற்றம் செய்வது, பிக்சட் டெபாசிட் உள்ளிட்டவற்றில் சேமித்து வைத்திருந்தால் அதை வாரிசுதாரர்களுக்கு மாற்றுவது ஆகிய அனைத்து பணிகளும் செய்வதற்கு ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கண்டிப்பாக தேவைப்படும்.
மேலும் இறந்த நபர் பயன்படுத்திய மொபைல் எண் ஓடிபி வகைக்காக தேவைப்படும். எனவே, ஒரு நபர் இறந்துவிட்டால் உடனே அவரது சம்பந்தப்பட்ட ஆவணங்களை தூக்கி எறிந்து விடாமல் அனைத்தையும் பத்திரமாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.
மேலும் ஒரு நபர் இறந்து விட்டால், வாக்காளர் அடையாள அட்டையில் அவருடைய பெயரை நீக்கம் செய்ய விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது, பாஸ்போர்ட்டை சரண்டர் செய்வது, ஓட்டுநர் உரிமத்தை சரண்டர் செய்வது, இறந்த நபரின் பெயரில் வாகனங்கள் இருந்தால் அதை பெயர் மாற்றம் செய்வது ஆகியவை கண்டிப்பாக செய்ய வேண்டும். இவை அனைத்திற்கும் ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்கள் தேவைப்படும். எனவே இந்த இரண்டையும் அனைத்து பணிகளையும் முடிக்கும் வரை பத்திரமாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.