எக்ஸ் தளம் மூலம் பண பரிமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், முதல் கட்டமாக அமெரிக்காவில் உள்ள 38 மாகாணங்களில் எக்ஸ் மூலம் பண பரிமாற்றம் செய்வதற்கான லைசன்ஸ் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே பேபால் என்ற பண பரிவர்த்தனை செயலியை வைத்துள்ள எலான் மஸ்க், எக்ஸ் தளத்தை அதனுடன் இணைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், டெக்னிக்கல் துறையில் வேலை தேடும் நபர்களுக்கு, தற்போது லிங்க்டின் ஒரு முக்கிய சமூக வலைதளமாக இருந்து வரும் நிலையில் எக்ஸ் தளத்திலும் அதே போன்ற அம்சங்கள் வரவேற்பதாகவும், YouTube போலவே வீடியோக்களை தனியாக பதிவு செய்யும் தளமாக மாற இருப்பதாகவும், டேட்டிங் செய்வதற்காக ஒரு தனிப்பகுதியும் ஆரம்பிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஆச்சரியமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.