டான்ஸ் நிகழ்ச்சியின் போது நடனக்கலைஞர் ஒருவர் திடீரென உயிருள்ள கோழியை கடித்து ரத்தத்தை பிழிந்து அதன்பின் கோழியை தூக்கி போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனகாபள்ளி என்ற பகுதியில் விஷ்ணு என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் நடன நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தபோது திடீரென நடனம் ஆட வந்த நடன கலைஞர் ஒருவர் உயிருள்ள கோழியை கையில் கொண்டு வந்தார் .
கோழியை வைத்து அவர் ஏதோ டான்ஸ் ஆட போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த கோழியின் தலையை தன் பற்களால் கடித்தார். உயிருள்ள அந்த கோழி துடிதுடித்த நிலையில் கோழியின் தலையை கடித்த அவர், அதிலிருந்து பீறிட்டு வந்த ரத்தத்தையும் குடித்தார்.
இந்த சம்பவத்தை பார்த்த நடனம் பார்க்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நடன கலைஞரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நடன கலைஞர் மீது மூன்று பிரிவுகளின் கையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நடன நிகழ்ச்சியை பார்க்க வந்த மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதை செய்ததாக அந்த நடன கலைஞர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.