கடலூரில் உள்ள ஒரு திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கில் திடீரென தீ விபத்தில் ஏற்படுத்திய அடுத்து பார்வையாளர்கள் அலறி அடித்து திரையரங்கில் இருந்து வெளியே ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கிய பொன்னின் செல்வன் திரைப்படம் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டியது என்றும். முதல் பாகம் 500 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இரண்டாம் பாகமும் அதே 500 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்களில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து இந்த படத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடலூரில் உள்ள பாரதி சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் இந்த படம் ரிலீஸ் ஆன தேதியில் இருந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று இந்த படம் திரையிடப்பட்டது. அப்போது திடீரென ஆபரேட்டர் அறையில் இருந்து புகை வந்ததாகவும் அங்கு தீப்பிடித்ததாகவும் தெரிகிறது.
ஆப்பரேட்டர் அறையில் தீ பிடித்தத்தை அதன் பிறகு திரையரங்கிற்குள் பரவியதால் பார்வையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆப்பரேட்டர் அறையில் இருந்த ஏசியிலிருந்து தான் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அந்த ஏசி முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இருகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஏசியில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீய அனைத்தனர். இதனை அடுத்து மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.