கிரெடிட் கார்டு பயனர்கள் இதையெல்லாம் செய்யவே செய்யாதீர்கள்.. பெரும் சிக்கல் ஏற்படும்..!

  இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் ஆதார் அட்டை வைத்திருப்பது போலவே, கிட்டத்தட்ட கிரெடிட் அட்டையையும் வைத்திருப்பதால், பணமே இல்லாமல் தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்கி, பலர் அதை சரியாக கட்டாமல் சிக்கலில் மாட்டிக்…

Credit Card

 

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் ஆதார் அட்டை வைத்திருப்பது போலவே, கிட்டத்தட்ட கிரெடிட் அட்டையையும் வைத்திருப்பதால், பணமே இல்லாமல் தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்கி, பலர் அதை சரியாக கட்டாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இந்த நிலையில், கிரெடிட் கார்டு சரியாக பயன்படுத்தினால் ஒரு வரப்பிரசாதமாகவும், தவறாக பயன்படுத்தினால் ஒரு நரகமாகவும் மாறிவிடும் என்று பொருளாதார ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக சில தவறுகளை செய்யக்கூடாது. குறிப்பாக, கிரெடிட் கார்டு லிமிட்டின் 90% பயன்படுத்தி விடுவது மிகப்பெரிய தவறு. அவசர தேவைக்கு மட்டும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டும். தேவை இல்லை என்றால் அந்த கடனை உடனடியாக அடைப்பது மிகவும் அவசியம்.

மேலும், கிரெடிட் கார்டு பில்லின் தொகையை முழுமையாக கட்ட முடியாத நேரத்தில், மினிமம் பேமெண்ட் ஆப்ஷனை பயன்படுத்துவது பலருக்கும் வலியுடனான நிலையை உருவாக்குகிறது. மினிமம் தொகையை மட்டுமே கட்டினால் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில வங்கிகள் 45% வரை வட்டி விதிப்பதால், மினிமம் பேமெண்ட் மட்டுமே கட்டுபவர்கள் கடனை அடைக்க முடியாத நிலையை சந்திக்கின்றனர்.

அதேபோல், கிரெடிட் கார்டு பில் கட்டாமல், இன்னொரு நிறுவனத்தில் இருந்து புதிய கிரெடிட் கார்டு பெற்று, அதிலிருந்து பணத்தை எடுத்து முதல் கார்டின் பில்லை கட்டுவது ஒரு பெரிய தவறாகும். மேலும், கிரெடிட் கார்டு செயலிகளின் “மேனேஜ் கார்டு” ஆப்ஷனை பயன்படுத்தி, உங்கள் லிமிட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.

கிரெடிட் கார்டு செலவினங்களில் ஒவ்வொரு ரூபாயையும் செலவழிக்கும் முன், அந்த பொருள் நமக்கு அவசியமானதா, தேவையானதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்கினால், பின்னர் பில் கட்டுவதில் சிரமம் ஏற்படும். இதனால், சிபில் ஸ்கோர் பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமின்றி, லோன் மற்றும் தனிநபர் கடன்களைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே, கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.