ஏப்ரல் 1 புதிய நிதியாண்டு தொடங்கியவுடன், இந்தியாவெங்கும் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பயனர்கள் முக்கியமான மாற்றங்களுக்கு தயாராக வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஸ்டேட் வங்கி , ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட முக்கிய வங்கிகள், ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் விதிமுறைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளன. இது நாடு முழுவதும் கோடிக்கணக்கான கிரெடிட் கார்டுதாரர்களை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது:.
SBIயில் குறைக்கப்பட்ட ரிவார்டு புள்ளிகள்
SBI, சில பரிவர்த்தனைகளுக்கான ரிவார்டு புள்ளிகளை குறைக்க இருப்பது மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும். உதாரணமாக, Simply Click SBI Card பயனர்கள் Amazon-ல் ஷாப்பிங் செய்யும்போது முன்பு 10X புள்ளிகள் கிடைத்திருந்த நிலையில், இனி 5X மட்டுமே கிடைக்கும். எனினும், Vistara, BookMyShow, Apollo 24/7 போன்ற பங்குதாரர்களின் சேவைகளுக்கு செலவு செய்தால், தற்போதைய 10X ரிவார்டு புள்ளிகள் தொடரும்.
Air India கிரெடிட் கார்டு சலுகைகள் குறைக்கப்படுகின்றன. அதேபோல், Air India SBI கிரெடிட் கார்டின் டிக்கெட் முன்பதிவு களுக்கு ரிவார்டு புள்ளிகள் மிகவும் குறைக்கப்பட்டுள்ளன.
Platinum பதிப்பு: முன்பு ₹100 செலவினத்திற்கு 15 புள்ளிகள் கிடைத்திருந்த நிலையில், இனி 5 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும்.
Signature பதிப்பு: முன்பு ₹100 செலவினத்திற்கு 30 புள்ளிகள் கிடைத்திருந்த நிலையில், இனி 10 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும்.
இதனால், இந்த ரிவார்ட்களை நம்பிய பயணிகள் பெரும் இழப்பை சந்திக்கக்கூடும்.
Vistara-Air India இணைப்பு – Axis Bank மாற்றம்:
Vistara மற்றும் Air India ஆகியவை ஒன்றிணைவதை தொடர்ந்து, Axis Bank அதன் Vistara கிரெடிட் கார்டு சலுகைகளை மாற்றியுள்ளது.
ஏப்ரல் 18ஆம் தேதி பிறகு புதுப்பிக்கப்படும் கார்டுகளுக்கு சலுகை கட்டணம் ரத்து செய்யப்படும்.இதனால், இந்த பிரத்யேக சலுகையை நம்பிய பயணிகள் ஏமாற்றமடையக்கூடும்.
ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க்: மைல்ஸ்டோன் ரிவார்டு இனி இல்லை:
ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் தனது Club Vistara கிரெடிட் கார்டுக்கான மைல்ஸ்டோன் ரிவார்டுகளை ஏப்ரல் 1 முதல் ரத்து செய்துள்ளது. வழக்கமாக செலவு மைல்ஸ்டோன் அடைந்தவர்களுக்கு கிடைக்கும் போனஸ் ரிவார்டுகள் இனி வழங்கப்படாது.
பிரீமியம் எக்கானமி (Premium Economy) டிக்கெட் வவுச்சர்கள் மற்றும் Club Vistara Silver உறுப்பினர் சலுகைகள் நீக்கப்படுகின்றன. எனினும், முதல் ஆண்டு வரை புதுப்பிக்கும் கட்டண சலுகை ரத்து செய்யப்படுகிறது.
கிரெடிட் கார்டு மாற்றங்களால் பயனர்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள்?
இந்த மாற்றங்கள், குறிப்பாக ஷாப்பிங், பயணம், எண்டர்டெயின்மெண்ட் போன்றவற்றுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களை அதிகமாக பாதிக்கும். குறைந்த ரிவார்டு புள்ளிகள் காரணமாக, பழைய அளவிலான சலுகைகளை பெற பயனர்கள் அதிக செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். வழங்கப்பட்டிருந்த பிரீமியம் உறுப்பினர் உரிமைகள் மற்றும் வவுச்சர்கள் நீக்கப்படுவதால், அடிக்கடி பயணம் செய்பவர்கள் பெரும் இழப்பை சந்திக்கலாம்.
இந்த மாற்றங்களின் தாக்கத்தை குறைக்கும் வகையில், நிபுணர்கள் சில பரிந்துரைகளை செய்துள்ளனர். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய விதிமுறைகளை ஆராயுங்கள். மற்ற வங்கிகளின் கிரெடிட் கார்டு சலுகைகளை ஒப்பிட்டு பார்த்து, உங்களுக்கேற்றதொரு கார்டை மாற்றி கொள்ளலாம். மேலும் அதிக புள்ளிகள் வழங்கும் பரிவர்த்தனைகளில் செலவை மையப்படுத்தும் வழிகளை கடைப்பிடிக்கலாம்.