திருப்பதி திருமலை லட்டில் மாட்டின் கொழுப்பு, மீன் எண்ணெய்.. புதிய ஆய்வில் தெரிய வந்த உண்மை

By Keerthana

Published:

திருப்பதி: திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரா திருக்கோயிலில் வழங்கப்படும் உலகப்புகழ் பெற்ற லட்டில், முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருந்தார். இதனையடுத்து லட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் நெய்க்குப் பதிலாக மாட்டின் கொழுப்பும், மீண் எண்ணெய்யும் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர அமைச்சருமான நர லோகேஷ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டார். அந்த வீடியோவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசுகையல், “திருமலையில் உள்ள கடவுள் ஏழுமலையான் கோவில் புனிதம் வாய்ந்த கோவில். இதற்கு முன் இருந்த ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் நிர்வாகத்தின்போது, திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்கின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தேன்.

கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒய்.எஸ். ஜெகன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நினைத்து வெட்கப்படுகிறேன். இதனைச் சரிசெய்ய வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை” என்று கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், லட்டுக்கள் சோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன. சோதனை முடிவுகள் குறித்து, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள கால்நடை மற்றும் உணவு ஆய்வு மையத்தின் (CALF) ஆய்வகம் விளக்கமாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவை லட்டில் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறதாம். இது மட்டுமின்றி, சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ் மற்றும் பல காய்கறிகளின் எண்ணெய் கொழுப்புகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் திருப்பதி பெருமாள் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.