மத நிகழ்ச்சியின்போது பொது இடத்தில் லிப்லாக் முத்தமிட்ட காதல் ஜோடி.. கடும் கண்டனங்கள்..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மத கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பொது இடத்தில் ஒரு காதல் ஜோடி லிப்லாக் முத்தமிட்ட நிலையில் அங்கிருந்த மதவாதிகள் கடும் அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார்…

liplock

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மத கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பொது இடத்தில் ஒரு காதல் ஜோடி லிப்லாக் முத்தமிட்ட நிலையில் அங்கிருந்த மதவாதிகள் கடும் அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் என்ற பகுதியில் மத சம்பந்தமான கண்காட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த இடத்திற்கு வந்த ஒரு காதல் ஜோடி திடீரென ஒருவரை ஒருவர் முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். இது உள்ளூர் போலீசாருக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது.

மத கண்காட்சி நடைபெறும் இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டது காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தை உள்ளூர் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு ஒரு காதல் ஜோடி முத்தமிட துணிந்தது பெரும் தவறு என்று சமூக வலைதள பயனாளிகள் காதல் ஜோடிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அந்த காதல் ஜோடிக்கு அருகில் இருந்த நூற்றுக்கணக்கானோர் இருவரும் முத்தமிட்டபோது கைதட்டி ஆரவாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் காரணமாக ஆத்திரமடைந்த உள்ளூர் வாசிகள் காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். கண்டிப்பாக காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

இந்து தலைவர் சச்சின் சிரோஹி நவுச்சந்தி என்பவர் நிலை காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்று காதல் ஜோடியின் ஆபாச சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார் என்றும் இதனால் காவல்துறையினருக்கு இந்த சம்பவம் பெரும் தலைவலியாக மாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.