தஞ்சாவூரில் 150 முட்டைகளை தனக்குத்தானே தலையில் அடித்த கவுன்சிலர் கணவர்.. காரணம் கேட்டு திகைத்த மக்கள்

தஞ்சாவூர்: பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் 150 முட்டைகளை தனக்குத்தானே தலையில் அடித்து உடைத்து ஊற்றிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படம் மற்றும்…

Councilor's husband hits himself on the head with 150 eggs in Thanjavur

தஞ்சாவூர்: பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் 150 முட்டைகளை தனக்குத்தானே தலையில் அடித்து உடைத்து ஊற்றிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். அண்ணாமலையின் இந்த நூதன போராட்டத்தை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கிண்டல் செய்தார்கள்..

இந்த நிலையில் அண்ணாமலையை கண்டித்து தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 3-வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் பாண்டியம்மாள். இவரது கணவர் ராம்பிரகாஷ். தி.மு.க.வை சேர்ந்த ராம்பிரகாஷ் நேற்று மதியம் அய்யம்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் இட்டவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட சம்பவம் வீரத்திற்கு புகழ் பெற்ற தமிழகத்தை இழிவுபடுத்தும் செயல் எனக்கூறி 150 முட்டைகளை தனக்குத்தானே தலையில் அடித்து உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.