வீடியோ கேம்ஸ் மூலம் இளைஞர்களை மதமாற்றம் செய்யும் கும்பல்.. அதிர்ச்சி தகவல்..!

By Bala Siva

Published:

இளைஞர்களை வீடியோ கேம்ஸ்களுக்கு அடிமையாக்கி அதன்பின்னர் மூளை சலவை செய்து மதமாற்றம் செய்யப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த யூடியூப் சேனல் வீடியோ கேம்ஸ்களை டவுன்லோட் செய்யும் வசதியை கொண்டுள்ளது. இந்த வீடியோ கேம்ஸ்களை டவுன்லோட் செய்து விளையாடுபவர்களுக்கு ரொக்க பரிசு அனுப்பப்படும் என்றும் ஒரு கட்டத்திற்கு மேல் வெற்றி வருபவர்களுக்கு இஸ்லாமியர்களின் புனித நூல் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்த இளைஞர்கள் படிப்படியாக மூளை சலவை செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒருவர் தனது மகன் கிஷோர் சமீப காலமாக வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் வீடியோ கேம்ஸ் மூலம் அவரது மூளையை செலவு செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றிவிட்டதாகவும் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

உடற்பயிற்சி என்ற பெயரில் கிஷோர் ஐந்து வேளையும் அருகில் உள்ள மசூதிக்கு சென்று தொழுகை நடத்தி வருவதாகவும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு மேற்கண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வீடியோ கேம்ஸ்களுக்கு முதலில் இளைஞர்களை அடிமையாக்குவது அதன் பிறகு வெற்றி பெற்றால் புனித நூல் அளித்து மதமாற்றுவது தோல்வி அடைந்தாலும் அதே புனித நூலை படிக்க செய்து இதை படித்தால் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம் என்று கூறுவது போன்ற விஷயங்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் தான் மதமாற்றம் செய்யப்படுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான ஷாநவாஸ் என்பவர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் அவரை வலைவீசி போலீஸ் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இருகுறித்து மேலும் விசாரணையில் இதுவரை 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இஸ்லாம் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக பஞ்சாப் அரியானா சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் தான் அதிகமாக மதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மதமாற்றம் என்பது பல்வேறு வழிகளில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வீடியோ கேம்ஸ் மூலம் மதமாற்றம் நடைபெற்றுள்ளதாக வெளிவந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.