பெண் மருத்துவர் குளித்ததை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்.. சிறையில் அடைப்பு..!

By Bala Siva

Published:

 

மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் குளித்ததை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மும்பை அரசு மருத்துவமனை குளியல் அறையில் பெண் மருத்துவர் ஒருவர் குளித்து கொண்டிருந்தபோது தன்னை யாரோ பார்க்கிறார்கள் என்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சுற்றிமுற்றி பார்த்த போது குளியலறை ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்துக் கொண்டது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மருத்துவர் உடனே குளியல் அறையில் உள்ள எச்சரிக்கை பொத்தானை அழுத்திய நிலையில் மருத்துவமனை முழுவதும் அலாரம் அடிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனை பாதுகாப்பாளர்கள் குளியலறை முன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடம் விசாரித்தபோது அந்த நபர் அதே மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார் என்பது தெரிய வந்தது. உடனடியாக மருத்துவமனை டீன் தகவல் கொடுத்ததை அடுத்து காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர்.

அந்த நபரின் செல்போனை ஆய்வு செய்தபோது இதே போல் வேறு சில பெண் ஊழியர்கள் குளித்ததையும் வீடியோ எடுத்துள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது