ரூ.8000 ஆக இருந்த ரூம் வாடகை ரூ.60,000.. கோல்ட் பிளே இசை நிகழ்ச்சியால் அதிர்ச்சி..!

By Bala Siva

Published:

 

பிரிட்டன் இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெற உள்ளதை அடுத்து, இந்த நிகழ்ச்சியின் நடைபெறும் நாட்களில் ஹோட்டலில் ரூம் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த கோல்டு பிளே என்ற இசைக்குழு மும்பையில் ஜனவரி 18, 19, 21 ஆகிய நாட்களில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ள நிலையில், இதற்கான டிக்கெட்டுகள் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக வெளிவந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, அகமதாபாத் நகரில் ஜனவரி 25ஆம் தேதி இன்னொரு இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், அகமதாபாத்தில் ஜனவரி 24 முதல் 27 வரை அனைத்து தங்கும் அறைகளிலும் ரூம் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அகமதாபாத்தின் முன்னணி 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றின் வாடகை ஒரு நாளுக்கு ரூ.8,000 இருந்த நிலையில், தற்போது ஜனவரி 24 முதல் 27 வரை புக் செய்யும் நபர்களுக்கு ரூ.60,000 வரை விலை நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இசை நிகழ்ச்சிக்காக பல முன்னணி ஹோட்டல்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து பைவ் ஸ்டார் மற்றும் 3 ஸ்டார் ஹோட்டல்களிலும் கட்டணம் அதிகமாக இருந்தாலும், மிக வேகமாக ரூம்கள் புக் ஆகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை இருந்த 5 ஸ்டார் மற்றும் 3 ஸ்டார் ஹோட்டல்கள் வாடகை, தற்போது ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் தற்போதைய நிலவரத்தில் குறைந்தபட்சம் ரூ.12,000 வரை வசூலிக்கப்படுவதோடு, அதிகபட்சமாக ரூ.80,000 வரை ரூம் வாடகை உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.