கோவை மக்களே..! இனி உங்களுக்கு எந்த பயமும் இல்ல. போலீஸ் கமிஷ்னரே சொன்ன குட் நீயூஸ்..

By John A

Published:

இந்தியாவின் தலை சிறந்த நகரங்களில் ஒன்றாக கோவை மாநகரம் திகழ்கிறது. ஏனெனில் தொழில் வாய்ப்புகள், கல்வி, மருத்துவம் என நகர கட்டமைப்புடனும், 20 கி.மீ. தாண்டி வந்தால் பொள்ளாச்சி வயல், தோப்புப் பகுதிகளும், ஒருபக்கம் உதகை, வால்பாறை என மலைப்பிரதேசங்களும் என வளம் நிறைந்த பூமியாகத் திகழ்கிறது. இதனால் தான் கோவை நோக்கி தங்கள் வாழ்வாதாரத்தினை நகர்த்துகின்றனர். இதனால் கோவையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதற்கேற்றாற் போல் குற்றச் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகிறது.

இந்நிலையில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மேடை ஏறிய முதல்வர் ஸ்டாலின்.. ஒலித்த கடவுளே அஜீத்தே கோஷம்..

அதில் ஒன்றுதான் போலீஸ் அக்கா திட்டம். சீருடை அணிந்த ஒரு பெண் காவலர் பெண்கள் அதிமாக உள்ள இடங்களில் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து பாதுகாப்பினை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் குறிக்கோள். இத்திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் அடுத்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இதன்படி, பொதுமக்கள் தங்கள் குறைகளை வேலைநாட்களில் தினமும் 12 மணி முதல் 2 மணிவரை காவல் ஆணையாளர் அலுவலத்தில் நேரில் வந்து என்னை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம் என்றும், வேறு யாராவது எனக்கு கமிஷ்னரைத் தெரியும், பிரச்சினைகளை நான் தீர்த்து வைக்கிறேன் என்று கூறினால் அவர்களை நம்ப வேண்டாம் என்றும் நேரடியாக வந்து குறைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.